
தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட் வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.84 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது.மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது