தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் 111 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இன்று பிற்பகல் ஒரு மணி வரை 9 மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.