
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து அதிக அளவு பெட்ரோல், டீசல் வாங்கி வருகின்றனர். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனம் தேவையான பெட்ரோல் டீசல் கையிருப்பில் உள்ளது. மக்கள் பயப்பட வேண்டாம் என கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியன் ஆயில் நாடு முழுவதும் போதுமான எரிபொருட்களை இருப்பு வைத்துள்ளது. எங்கள் விநியோக வழிதடங்கள் சீராக இயங்குகிறது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை. எரிபொருள் மற்றும் எல்பிஜி எங்கள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உடனடியாக கிடைக்கிறது. மக்கள் அவசரப்படாமல் அமைதியாக இருக்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொண்டது.