ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் பதவியேற்க இருக்கிறார்கள். அதே சமயத்தில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியும் நடந்து முடிந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை ஒப்பு கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, நான் இதுபோன்று தேர்தல் முடிவுகள் வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. மக்கள் அளித்த முடிவுகள் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியை தருவதாகவும் இருக்கிறது. நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம்‌. இருப்பினும் 40% வாக்குகளை கூட பெறவில்லை. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு நாங்கள் மீண்டும் எழுவோம். எதிர்க்கட்சியாக இருப்பது எங்களுக்கு புதிது கிடையாது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள கட்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மேலும் குரலற்றவர்களின் குரலாக எங்கள் ‌ கட்சி செயல்படும் என்று கூறியுள்ளார்.