தனது செல்ல நாயை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என மக்களிடம் உதவி கேட்டுள்ளார் பிரபல நடிகை ரம்யா. குத்து, பொல்லாதவன் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் செய்த ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் காணாமல் போன தனது செல்ல நாயை பத்திரமாக மீட்டுக்கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ‘சாம்’ என்ற அந்த நாய் பெங்களூருவில் இன்று தொலைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.