தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் உப்புமா போன்ற சிற்றுண்டி வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை தவிர வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும். ஆனால் பிப்ரவரி 22 நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரம் ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை கர்நாடக மாநில பள்ளிகளுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இந்த திட்டமானது ஏழை மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.