பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகாவிஷ்ணு சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றின் செயல் சிக்கினார். அவர் மூடநம்பிக்கை விஷயங்களையும் அறிவியலுக்கு புறமான விஷயங்களையும் பேசி உள்ளார். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது எல்லா உயிரினங்களையும் பேரன்பு கொண்ட நேசிப்பது தான் ஆன்மீகம் இந்த உலகத்தை என்னைப் பெற்ற தாய் தந்தையினர் எனக்கு காண்பித்தார்கள். என் ஆசிரியர்கள் தான் இந்த உலகத்திற்கு என்னை காட்டினார்கள். ஆசிரியர்களை மனதிற்குள் வைத்து வணங்குவது வேறு. காலை கழுவுவது என்ன மாதிரியான செயல்? இதுவெல்லாம் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கோட்பாடுகள்.

இது எப்படி எங்கு வந்தது? இதுவரை இல்லாத பிரச்சனை அரசு பள்ளியில் ஆன்மீக போதனை எப்படி வந்தது? யாருக்கு தெரியாமல் வந்து விட்டதா? இது வெளியே தெரிந்து விட்டது. தெரியவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்? தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதனை ஏன் செய்தியாக்குகிறீர்கள். வேறு செய்தியை மறைப்பதற்கு இதனை பெரிது செய்கிறீர்கள். அவ்வளவுதான். யாரோட அனுமதியும் இல்லாமல் தான் அவர் பள்ளிக்கு வந்து பேசி இருப்பாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளி மேலாண்மை குழு எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என கூறுகிறார்கள். அந்த அளவுக்கு தான் பள்ளி மேலாண்மையும் கல்வி துறையும் இயங்குகிறதா? எங்கிருந்து நான் யாருடன் பேசுகிறேன் என்பதை பதிவு செய்ய தெரிகிறது. மூன்று நான்கு வருடத்திற்கு முன்பு கைபேசியில் இருப்பது எல்லாம் எடுத்து வெளியே விட தெரிகிறது. இதை கண்டுபிடிக்க தெரியாதா என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.