மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு மற்றும் தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் கொண்ட மருத்துவ குழு சிகிச்சை வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பாஜக அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக யார் வருவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னும் தேர்வாகவில்லை. ஏனெனில் பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிசை முதல்வராக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அவர் பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பாஜக மேலிடம் யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் என்றும் இதைத்தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். மேலும் இதன் காரணமாக அடுத்த முதல்வர் யார் என்று எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.