முகமது ஷமி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர், தற்போது அவரது மகளுடன் காட்சி தரும் ஒரு வைரல் வீடியோவால் அதிக கவனத்தை பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகுந்த பங்களிப்பு செய்தவர். அதை தொடர்ந்து, தனது மகளுடன் நீண்டநாட்களுக்கு பிறகு ஷாப்பிங் சென்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் பலரின் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்ததன் பின்னணி பற்றி அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் ஒரு முக்கிய குறிப்பு வழங்கியுள்ளார். ஷமியின் மகளின் பாஸ்போர்ட் காலம் முடிந்ததால், புதிய பாஸ்போர்ட்டுக்கான கையெழுத்து பெறுவதற்காக அவர் தனது தந்தையை சந்தித்ததாக ஹசின் கூறினார். ஆனால், ஷமி கையெழுத்து அளிக்காமல், தனது மகளைக் கொண்டு ஷாப்பிங் மாலுக்கு சென்று இருக்கிறான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஹசினின் இச்சொல்லுகளில், ஷமி அதற்காக ஒரு விளம்பரத்திற்காக மட்டுமே அந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது மகளுக்கு தேவையான பரிசுகளை வாங்கி தராமல், சிரமத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகள் கிட்டார் மற்றும் கேமரா வாங்க விரும்பினாலும், அதற்கான உதவியை ஷமி அளிக்கவில்லை.

மேலும் அந்த கடையில் முகமது ஷமி விளம்பரம் செய்வதாகவும் அவர் அந்த கடையில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அதற்கு பணம் செலுத்தி தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த கடையை விளம்பரப்படுத்துவதற்காகவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட எந்த ஒரு வீடியோவும் இல்லை என்பதாலும் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட மகளை சந்தித்த நிலையில் அது தொடர்பான ஏன் வீடியோவை வெளியிடவில்லை எனவும் அவருடைய முன்னாள் மனைவி கூறியுள்ளார்.