தஞ்சை மாவட்டத்தில் முருகானந்தம் என்ற 55 வயது விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் முருகானந்தம் தன்னுடைய மகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் அதற்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த அந்த விழாவை நடத்த முருகானந்தத்திடம் போதிய அளவுக்கு பணம் இல்லை.

இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் ‌ சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாபநாசம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.