தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாட்டிலேயே தமிழகம் தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றது.

பருவ மழை காலங்களில் பள்ளிகளுக்கான விடுமுறை தொடர்பாக முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துக் கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீட்டு விண்ணப்பங்களை அனுப்பியுள்ள தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் உரிமை தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.