தமிழக ரேஷன் கடைகளில் பயனாளிகள் கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வருகிறார்கள். இதில் வயதானவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும்  பயோமெட்ரிக் இயந்திரத்தில்  அவ்வப்போது  இயந்திர கோளாறுகள் ஏற்படுவதால் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வந்ததையடுத்து தற்போது கண் கருவிழி பதிவு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்குள் தமிழகத்தில் 36,000 ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கைரேகை சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.