மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து போயினர். திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது. இதனையடுத்து  முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைத்த உடனே மக்கள் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியுடையவர்கள் விடுபட்டிருந்தால் செப்டம்பர் 18 முதல் உதவி மையத்தை அணுகி மீண்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.1000 யார் யாருக்கு தேவை இருக்கிறதோ, அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்றார்.