
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு 1000 ரூபாய் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.