தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களின் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆனால் அவர்களுக்காக மேலும் விண்ணப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் உரிய காரணங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இ சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வரும் நிலையில் இதுவரை 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்து மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். அதே சமயம் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அக்டோபர் 18ஆம் தேதி கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. எனவே மகளிர் உரிமைத்தொகை பெற விருப்பமுள்ள பெண்கள் மேல்முறையீடு செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.