சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்  தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இதில் பேசியமுதல்வர் ஸ்டாலின், அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு செயல்படுகிறது. மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படுவதன் மூலம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை இந்த குழுவின் அறிக்கை மூலமே பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.