தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 467 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த மாதம் 1138 கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக அரசு கொடுத்துள்ளது.

இதில் பெரும் பகுதி மதுபானம் மூலமாக அரசிடமே திரும்பி உள்ளது. இவ்வாறு சென்றால் தமிழக மக்களுக்கு விடியல் எப்படி வரும்? என இரண்டையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டுள்ளார். இதனையே பாமகவினர் பரப்புரையாகவும் செய்து வருகின்றனர்.