
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதன் பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகை அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டதால் படங்களில் ஹீரோயினாக நடிக்க துவங்கி விட்டார். இவர் ஓ மை டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமான நிலையில் தற்போது தமிழில் தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அணிக்கு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். மேலும் அந்த வகையில் தற்போது டிரான்ஸ்பரென்ட் சேலையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
