நடப்பு ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டமானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை  முதலாக தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் எட்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் 14 ஓவர் வரை சாய் கிஷோர் வீசினார் .அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும்  பிட்சிற்கு இடையே வந்து முறைத்துக் கொண்டார்கள். உடனே நடுவர் குறுக்கிட்டு  இரண்டு  பேரையும் பிரித்து விட்டுள்ளார். பின்பு பாண்டியா போ என்பது போல சைகை செய்துள்ளார். பின்னர் போட்டி முடிந்ததும் மோதலை மறந்துவிட்டு சாய்  கிஷோரை ஹர்திக் பாண்டியா கட்டியணைத்துள்ளார்.