இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது வங்கிகளை விட அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அதில் அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.

மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம்:

இந்த திட்டம் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்தியேக திட்டம் ஆகும். இதில் அனைத்து பெண்களும் சேர்ந்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 2 லட்சம் வரை சேமிக்கலாம் எனவும் வருடத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என்பதால் உங்களது பணத்திற்கு 100% உத்திரவாதம் உள்ளது.

கிசான் விகாஸ் பத்திரம்:

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு இரட்டிப்புலாபம் கிடைக்கும் என்பதால் டெபாசிட் தொகையானது விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளில் நலத்திட்டங்களுக்கும் இது கிடைக்கும். இதில் ஏழு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வழங்கப்படுவதால் பலரும் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி திட்டத்தில் சேரலாம் எனவும் 10 வருடங்களில் உங்களது பணம் இரட்டிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.