
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் மோதி கொள்கிறார்கள். அந்த வகையில் மோசடிக்காரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை இணைத்து பாஜக கலாய்த்து போஸ்டர் வெளியிட்டது. அதாவது பங்குச்சந்தை மோசடியில் ஹர்ஷத் மேத்தா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு படமாக உருவானது.
இந்த படத்தின் பெயர் திஸ்கேம் 1992. இந்த படத்தின் போஸ்டர் உடன் தான் அரவிந்த் கெஜ்ரிவாலை இணைத்து பாஜக கலைந்து போஸ்டர் வெளியிட்டது. அதோடு அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய ஆட்டம். போலியான வாக்குறுதிகள் மூலமாக ஆட்சியை காப்பாற்ற முயல்கிறார் என்று பதிவிட்டுள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திகோட் பட போஸ்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
G.O.A.T. 🔥 pic.twitter.com/RoNdSZGXFb
— AAP (@AamAadmiParty) January 2, 2025