பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது “போலீஸ் அக்கா” என்ற திட்டம் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது.இதன் மூலம்  கோவை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காண்கின்றனர். இத்திட்டம் குறித்து பேசிய மாநகர போலீஸ் கமிஷனர் ,பல கல்லூரிகளில் மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவிகளே உங்களை யாராவது மிரட்டினால் எனக்கு போலீஸ் அக்காவை தெரியும் என்று தைரியமாக கூறுங்கள் என்று அறிவுரை வழங்கியுயள்ளார்.