கேரளா மாநிலம், த்ரிசூர் அருகே அதிகாலையில் ஓட்டப் பயிற்சிக்குச் சென்ற 22 வயது இளம்பெண் ஒருவர் திடீரெனச் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் – கவிதா தம்பதியின் மகள் ஆதித்யா (22) என்பவரே உயிரிழந்தவர்.

தளிக்களம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆதித்யா மயங்கிச் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவர், காவல்துறைத் தேர்வில் (Police Test) பங்கேற்பதற்காகத் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வந்தவர் என்று தெரிகிறது. இந்த இளம் வயதிலேயே ஆதித்யா மாரடைப்பு போன்ற காரணத்தால் திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அபர்ணா என்ற சகோதரியும் உள்ளார்.