காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு அதாவது பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா தீவிரமாக இருக்கிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அறிவித்த ஒப்பந்தங்கள் அமலில் இருக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் இதன் மூலம் அட்டாரி வாகா எல்லை மூடல், நாட்டை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டது, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்டவைகள் அமலில் இருக்கும் என்பதை தெளிவாகியுள்ளது.