காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்பதால் இந்தியா சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிநீரையும் நிறுத்தியது. அதன்படி சிந்து, செனாப் மற்றும் ஜீலம் உள்ளிட்ட நதி நீரை இந்தியா நிறுத்தய நிலையில் இந்த அணைகளுக்கு நடுவில் புதிய அணைகளை கட்டவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இதற்கு அவ்வப்போது இந்தியாவும் பதிலடி தாக்குதல் கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் தற்போது ஷெனாப் நதியிலிருந்து திடீரென இந்தியா தண்ணீரை திறந்து விட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை 5 மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் ஷெனாப் நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்தியா தண்ணீரை திறந்து விட்டது. மேலும் இது பாகிஸ்தானுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.