
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அவர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அறிவித்த நிலையில் இதனை மத்திய அரசு உறுதி செய்தது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நேற்று இரவு காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் நேற்று இரவு சர்வதேச எல்லைப் பகுதியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்தார்.
அதன்படி பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் வீர மரணம் அடைந்தனர். மேலும் இவருடைய மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.