தென்கொரியாவின் தெற்குப் பகுதிகளில் கடுமையான வறண்ட வானிலையும், பலத்த காற்றும் காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். அன்டோங் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தீ வேகமாக பரவிய நிலையில், அங்குள்ள பொதுமக்கள் அவசரகால  தீவிர உத்தரவின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

இந்த காட்டுத்தீயால் 43,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி மற்றும் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீக்கிரையாகி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் பல அவசர சேவைத் துறைகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உய்சோங் நகரத்திற்கு அருகிலுள்ள சியோங்சாங் கவுன்டியில் உள்ள சிறைச்சாலையில் இருந்த 2,600 கைதிகள் பாதுகாப்புக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.