நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி விமானத்தில் கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்துகொள்ள கோவா சென்ற நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி மீது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது முன்னதாக கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜயை சேர்த்து வைத்து பேசினார்கள். அப்போது கீர்த்தி சுரேஷ் பிஷ்மிக்கு போன் போட்டு ‌ என்னைப் பற்றியும் விஜய் சார் பற்றியும் தேவையில்லாத பொய்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நான் செம அப்சட்டில் இருக்கிறேன். நான் பள்ளி படிக்கும்போது இருந்தே ஒருவரை காதலித்து வரும் நிலையில் எங்க காதலுக்கு சம்மதம் வாங்குவதற்காக வீட்டில் போராடிக் கொண்டிருக்கிறேன். இது தெரியாமல் தேவையில்லாத வதந்திகள் பரவுகிறது.

என்னுடைய காதலரின் பிறந்தநாள் அன்று விஜய் சார் அவருக்கு போன் செய்து பேசியுள்ளார். நான் இதையெல்லாம் பொதுவெளியில் கூற முடியாது. இது தொடர்பாக நீங்க பேசுங்க என்று கீர்த்தி சுரேஷ் தன்னிடம் கூறியதாகவும் அது தொடர்பான புகைப்படத்தையும் தனக்கு அனுப்பியதாகவும் பிஸ்மி கூறியுள்ளார். அதன் பிறகு திரிஷா மற்றும் விஜய் இருவரும் தனி விமானத்தில் சென்றுள்ள நிலையில் அவர்கள் இருவரும் கில்லி படத்தில் நடிக்கும் போது இருந்தே நல்ல நண்பர்கள். இதுவே ஒரு ஆண் நண்பர் விஜயுடன் சென்றிருந்தால் இப்படி பேசுவார்களா. ஒரு பெண் அதுவும் நடிகை என்பதால் இப்படி சேர்த்து வைத்து பேசுகிறார்கள். மேலும் உண்மை என்னவென்று தெரியாமல் இப்படி விஜய் மற்றும் திரிஷாவை சேர்த்து வைத்து பேசக்கூடாது இருவரும் நல்ல நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார்.