
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அப்படி செல்போன் பயன்படுத்தும் போது நம்மில் பலருக்கும் செல்போனில் அடிக்கடி ஆபாச அறிவிப்புகள் வரும். இதனால் பொது இடங்களில் நாம் செல்போனை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோம்.
இதனை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் உங்களது ஃபோனில் இருக்கும் settings என்பதை கிளிக் செய்து பேனலில் இருக்கும் privacy and security என்பதை கிளிக் செய்து தள அமைப்புகளை தேர்ந்தெடுக்கவும். அறிவிப்புகளை கிளிக் செய்ய வேண்டும். அறிவிப்புகளை அனுப்பும் தளங்களை don’t allow என்பதை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலமாக உங்களுடைய செல்போனுக்கு வரும் ஆபாச அறிவிப்புகளை நிறுத்த முடியும்.