
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரி இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது .இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. புஷ்பா பி ரைஸ் திரைப்படம் 390 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் புஷ்பா தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி உலகளவில் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் 32 வது நாள் முடிவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 1831 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்தது. இந்தியாவில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி 2 முதல் இடத்தில் இருந்தது. அந்த சாதனையை முறியடித்து புஷ்பா 2 திரைப்படம் முதல் இடத்திற்கு முன்னேறியது. பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் 1416.9 கோடியை வசூல் செய்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் 1438 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.