இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் அதிகரித்துவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை செல்போன் இல்லாமல் அன்றைய பொழுதே செல்வதில்லை. அந்த அளவிற்கு அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். பிறந்த குழந்தை கூட செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டது. ஒரு நாள் கூட செல்போன் இல்லாமல் இந்த உலகமே சுற்றாது என்று சொல்லும் அளவிற்கு இன்றைய காலம் மாறிவிட்டது.

இந்த நிலையில் ஒரு மாதம் முழுவதும் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தாமல் இருப்பவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த சிக்கிஸ் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. நமது வாழ்க்கையில் அதிக கவனசிதரலை ஏற்படுத்தும் ஒன்றாக ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளதால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த போட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.