மூளையில் ஏற்படும் சிக்கலான கட்டிகளை மிகவும் எளிதான வகையில் ஒரு ரத்த பரிசோதனை கொண்டே உறுதிப்படுத்தும் முறையினை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ள மனித மூளையில் ஏற்படும் கட்டிகளையும் அவற்றின் தன்மைகளையும் கண்டறிவது எளிதல்ல. குறிப்பாக பயாப்ஸி போன்ற புற்றுநோய் கட்டிகள் கண்டறியும் சோதனையை மூளையில் மேற்கொள்வது எளிதானது மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் சிக்கலானது.

இந்நிலையில் சாதாரண ரத்த பரிசோதனையின் மூலமாகவே மூளையில் ஏற்படும் பல வகையான கட்டிகளின் தன்மைகளை உறுதிப்படுத்தும் ஆய்வக முறையை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் நோயை விரைவாக கண்டறிவதுடன் உடனடியாக சிகிச்சை தொடங்கவும் முடியும் என்று பிரிட்டன் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.