
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
மேலும் அதன்படி தற்போது ட்ரெய்லர் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதோடு இந்த படத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.