லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, சத்யராஜ், பகத் பாஸில், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சிக்கிடு பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த பாடல் யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.