
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கினார். கடந்த மாதம் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் நடைபெறுகிறது.
அதன்பிறகு சிலர் நேரடியாகவே கட்சியில் இணைந்து வருகிறார்கள். முன்னதாக நடிகர் சாப்ளின் பாலு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் தற்போது வாழைப்படத்தில் நடித்த நடிகர் பொன்வேல் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். மேலும் இவர் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அந்த படத்தில் பொன்வேல் சிவனைந்தனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.