ரேஷன் அட்டை மூலம் எழை, எளிய மக்களுக்கு அரசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000  ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள தகுதியான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சிகப்பு நிற அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாயாக ஏற்கனவே உயர்த்தப்பட்டது.  தற்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததால் குடும்ப தலைவிகள் குஷியில் உள்ளனர்.