தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை தற்போது அரசு செயல்படுத்தியுள்ளது. அதன்படி செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இது வழங்கப்படும். அதன்படி இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பெண்கள், வேலையில்லாத மாற்று திறனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, செவித்திறன் குறைபாடு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் தேவையானதாகும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அதிகாரியிடம் அதனை சமர்ப்பிக்க வேண்டும்.