
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் என கூறப்பட்ட நிலையில் தங்கம் நிலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 9796 ரூபாயாகவும், ஒரு சவரன் 78368 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 111 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,11,000 ரூபாயாகவும் இருக்கிறது.