தமிழகத்தில் பொறியியல் செயற்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில் ஜூன் நான்காம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்படும். அதன் பிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளித்து மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து தமிழக உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. எனவே நடப்பு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு ஏன் வழங்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது.