தமிழகத்தில் பொறியியல் பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தலைமை வகித்து வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுடன் ஆன்லைன் மூலம் நேரடியாக உரையாடி பாடம் நடத்த டிஜிட்டல் பலகைகளை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு 45 டிஜிட்டல் வெண் பலகைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அதில் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும். இந்த கருவியில் 8gb ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரிமோட் ஸ்கிரீன் ஷேரிங், வைஃபை, வீடியோ ரெக்கார்டிங், ஸ்கிரீன் லாக் மற்றும் வாய்ஸ் டைப்பிங் போன்ற பல வகையான நவீன வசதிகள் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை பயிலும் போது மாணவர்களின் புரிதல் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.