கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் இளம் பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சாகேலி ருத்ரா என்ற இளம் பெண் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவார். இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏர்போர்ட்டில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் நடனமாடி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.