இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே H3N2 வகை வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலமாக 2000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பரவும் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அறிவித்துள்ளார்.