எல்ஐசி நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசித் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை lic அறிமுகம் செய்துள்ளது. இன்டெக்ஸ் பிளஸ் என்ற பெயரில் தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் பாலிசி பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாலிசியானது ஒரு யூனிட் இணைக்கப்பட்ட வழக்கமான பிரிமியம் தனிநபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும்.

இது முழு பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டு தொகையுடன் சேமிப்பை வழங்குகிறது. பாலிசியின் கீழ் குறிப்பிட்ட பாலிசி வருடங்கள் முடிந்தவுடன் வருடாந்திர பிரிமியத்தின் சதவீதமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை யூனிட் பண்டில் சேர்க்கப்பட்டு யூனிட் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் .அடிப்படை காப்பீட்டு தொகையை பொறுத்து பாலிசிதாரரின் அதிகபட்ச வயது 50 அல்லது 60 வருடங்கள் வரை இருக்கலாம்.