பொதுவாக வங்கிகள் நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு இடமாக உள்ளது. வங்கிகளில் பணத்தை சேமிக்கவும், பணத்தை எடுக்கவும், கடன் பெறுவதற்கும், மற்ற பண பரிவர்த்தனைகளுக்கும் நம்முடைய வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணைப்படி வார இறுதி நாட்கள் தவிர பண்டிகை விடுமுறைகள் அல்லது சில உள்ளூர் பிராந்தியக் கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அதன்படி,

ஏப்ரல் 1- ஆண்டு கணக்கு முடிவு காரணமாக வங்கி திறந்திருந்தாலும், பொதுமக்கள் சேவை இல்லை.

ஏப்ரல் 5 – பாபு ஜெகஜீவன் ராம் ஜெயந்தி காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வங்கி விடுமுறை

ஏப்ரல் 10- மகாவீர் ஜெயந்தி காரணமாக குஜராத், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் வங்கி விடுமுறை.

ஏப்ரல் 12- இரண்டாவது சனிக்கிழமை

ஏப்ரல் 14- அம்பேத்கர் ஜெயந்தி நாள்

ஏப்ரல் 15-பெங்காலி புத்தாண்டு, போக் பிஹு, இமாச்சலப் பிரதேச தினம்

ஏப்ரல் 16, 2025

போக் பிஹு காரணமாக அசாம் மற்றும் சில பகுதிகளில்

ஏப்ரல் 18, 2025

புனித வெள்ளி நாளான ஏப்.18 அன்று திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

ஏப்ரல் 20- ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 21- காரியா பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 26- நான்காவது சனிக்கிழமை

ஏப்ரல் 27-ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 29-பரசுராம் ஜெயந்தி காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் விடுமுறை.

ஏப்ரல் 30- பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கர்நாடகாவில் விடுமுறை