நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் நிச்சயம் மினிமம் பேலன்ஸ் என்பது இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸ் சில வங்கிகளில் ரூ.500 ஆக இருக்கும் நிலையில், சில வங்கிகளில் ரூ.1000 ஆக இருக்கிறது. ஒருவேளை மினிமம் பேலன்ஸ் தொகையை விட குறைவாக வங்கி கணக்கில் பணம் இருந்தால் அதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி நிர்வாகம் அபராதம் வசூலிக்கிறது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் அபராதம் விதிப்பது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் வழங்கியுள்ளது. அப்போது பொதுத்துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடமிருந்து கடந்த 5 வருடங்களில் மட்டும் ரூ.8500 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற  வங்கிகளில் அதிகபட்சமாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.