காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். அதோடு காதல் என்பது கடல் கடந்தும் மொழி, மதம் போன்றவைகளை கடந்தும் வாழ்கிறது. இந்நிலையில் அரியலூரில் மதிவதனன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்கு மியான்மரைச் சேர்ந்த ஏய் ஏய்‌ மோ என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது அரியலூரில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. பெண்ணின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் வீடியோ காலில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இந்த ஜோடிகளுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.