தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் வாழ்வதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதனுடன் பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாயும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்த மூன்று தொகையும் சேர்த்து மொத்தமாக அடுத்த மாதம் பொது மக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 2000 ரூபாய் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.