இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமுமான மகேந்திர சிங் தோனி, தனது எளிமையான குணத்தால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். ஐபிஎல் 2026 பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சிப் போட்டியின் போது, ‘கோடி அண்ணா’ என்று அழைக்கப்படும் முதிய உதவியாளர் ஒருவர் தோனியின் கனமான விளையாட்டுப் பையை வாங்க முன்வந்தார். ஆனால், தோனி அதனைப் பணிவுடன் மறுத்து, “இல்லை, நானே கொண்டு வருகிறேன்” என்று கூறி, அவரிடமிருந்து பையை விலக்கித் தனது தோளில் சுமந்து சென்றார்.
When Kodi anna asked for the bag, MS Dhoni said, ‘No, I will bring it.
MS Dhoni started practicing in the nets 💛 pic.twitter.com/8LoYDGHyWz
— Prakash (@definitelynot05) April 1, 2026
“>
இந்தச் சிறிய ஆனால் அர்த்தமுள்ள செயல், தோனி ஏன் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படுகிறார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. வயது முதிர்ந்த ஊழியரிடம் அவர் காட்டிய மரியாதையும், தனது வேலையைத் தானே செய்ய வேண்டும் என்ற அவரின் தன்னடக்கமும் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் காயங்கள் மற்றும் ஓய்வு குறித்த செய்திகளுக்கு மத்தியில், மைதானத்திற்கு வெளியேயும் தோனி ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். “தலைவன் என்பவன் அதிகாரத்தைச் செலுத்துபவன் அல்ல, அன்பால் அனைவரையும் அரவணைப்பவன்” என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
