
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 29 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை தொடர்ந்து குற்றவாளிகள் காரை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.