ஹைதராபாத்தில் பேருந்தை நிறுத்தாததால் மது போதையில் இருந்த பெண் பயணி நடத்துனர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த அந்த பெண் பயணி குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துக்கோரி நடத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆனால் நடத்துனர் அந்த பகுதியில் நிறுத்தம் இல்லாததால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளும்படி பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பயணி தனது பையில் வைத்திருந்த பாம்பை நடத்துனர் மீது வீசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.